அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவு!

அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவு!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பிரிங் பகுதியில் Six Flags Hurricane Harbor Splashtown எனும் குழந்தைகளுக்கான நீர்பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தோல் எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு 60க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாதிப்புக்கு உள்ளான 26 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அவர்களில் 3 வயது குழந்தை கடுமையான பாதிப்புக்கு உள்ளானதாகவும், தற்போது அக்குழந்தையின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ரசாயனத் தீங்கு அகற்றும் நடைமுறைக்குப் பிறகு 39 பேர் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதிப்பு கந்தக அமிலம் மற்றும் ரசாயனத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ரசாயனக் கசிவை தொடர்ந்து பூங்கா மூடப்பட்டது. “எங்கள் விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். விபத்துக்கான காரணத்தை அறியும் பொருட்டு பூங்கா உடனடியாக மூடப்பட்டுள்ளது” என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காவை மீண்டும் திறப்பதற்கு முன்பு அனைத்து பாதுகாப்பு விஷயங்களையும் அது பூர்த்தி செய்து இருப்பது உறுதி செய்யப்படும். கடைசியாக அந்த பூங்காவில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டது என்று ஹூஸ்டன் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad