தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!

 தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!


நடப்பாண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட உள்ளன. நீட் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் பணி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதனால் நீட் எழுத விரும்பும் மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் பிழையின்றி விண்ணப்பிக்க அந்தந்த பள்ளிகளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விண்ணப்பத்தில் சில மாணவர்கள் தவறு செய்வதால், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் இதனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களின் ஒரு தேர்வு விண்ணப்பம் கூட ரத்தாகி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad