தேர்தல் தோல்விக்கு நீங்களேதான் காரணம்... சி.வி.சண்முகத்துக்கு பாஜக பதிலடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 7, 2021

தேர்தல் தோல்விக்கு நீங்களேதான் காரணம்... சி.வி.சண்முகத்துக்கு பாஜக பதிலடி!

தேர்தல் தோல்விக்கு நீங்களேதான் காரணம்... சி.வி.சண்முகத்துக்கு பாஜக பதிலடி!

" அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக இழந்துவிட்டோம். அதனால்தான் அதிமுக தோல்வியை சந்திக்க நேர்ந்தது" என்று சட்டத் துறை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியிருப்பது தமிழக அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரின் இந்த கருத்துக்கு பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் எதிர்வினை ஆற்றியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. உ.பி., கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. நாடு முழுவதும் பாஜகவிற்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்துள்ளனர்.

சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 25 எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அரசியல் நன்கு தெரிந்தவர்கள் இப்படிக் குற்றம் சாட்டமாட்டார்கள்.
இவர் தோற்றதற்கு பாஜகவைக் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் மத்திய, மாநிலத் தலைமைகள் முடிவெடுக்கும்.

பாஜக தொண்டர்கள்கூட தேர்தல் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்று கருதுகின்றனர். அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை தோல்விக்கு காரணமென சொல்ல முடியும். பாஜகவுக்கு அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்கிறார்கள்" என்று கே.டி. ராகவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad