தமிழகப் பள்ளிகளில் இன்று முதல்; நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கட்டாயம் வழங்க வேண்டும் என்று சொல்கிறது நமது அரசியல் சட்டம். குறிப்பாக மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டமானது 5 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதற்காக அரசு பள்ளிகள் கதவை திறந்து வைத்து காத்துக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற பெற்றோரின் ஆர்வம் குறைந்தபாடில்லை. இதனைக் கருத்தில் கொண்டு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் தனியார் பள்ளிகளில்
மாணவர் விண்ணப்ப பதிவு தொடக்கம்
எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணமின்றி படிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதற்காக அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை இலவச கட்டாய கல்வி நடைமுறையானது கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கு இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று (ஜூலை 5) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதையொட்டி மாணவர்களின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் எண், ரேஷன் கார்டு, வருமான சான்று, சாதி சான்று மற்றும் சிறப்பு பிரிவினருக்கான சான்று ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆகும். இலவச கட்டாய கல்விக்காக விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சந்தேகம் வந்தால் 14417 என்ற தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment