ஷாக் கொடுத்த திருப்பதி தேவஸ்தானம்; கிரிமினல் நடவடிக்கை பாயும்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

ஷாக் கொடுத்த திருப்பதி தேவஸ்தானம்; கிரிமினல் நடவடிக்கை பாயும்!

ஷாக் கொடுத்த திருப்பதி தேவஸ்தானம்; கிரிமினல் நடவடிக்கை பாயும்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து நேரடியாக வருவோர் மட்டுமின்றி, டிராவல் ஏஜென்சிகள் மூலம் முன்பதிவு செய்து கொண்டும் வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையான் தரிசன முறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் மாதந்தோறும் 20ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. மேலும் கல்யாண உற்சவ தரிசன டிக்கெட்களும் ஆன்லைனில் விடப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஒன்று ஏழுமலையான் தரிசனத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய பக்தர்களிடம் இருந்து அதிகளவில் பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் மீது

திருமலை இரண்டாவது நகர காவல் நிலைய போலீசாரிடம் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. உடனே தனியார் டிராவல்ஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், www.tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை எண் மூலம் விவரங்களை பதிவு செய்து டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேசமயம் இடைத்தரகர்களை நம்பி அவர்களிடம் பணத்தை இழக்க வேண்டாம்.இவ்வாறு பக்தர்களிடம் அதிக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்யும் இடைத்தரகர்கள், டிராவல் ஏஜென்சிகள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad