பாய்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் ஷாக்!
தமிழகத்தில் கடந்த மே மாதம் பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை தூசு தட்ட ஆரம்பித்துள்ளது. பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிக்கிக் கொண்டார். ஆவின் விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கவனம் திரும்பியது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதி கரூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 25 லட்ச ரூபாய் ரொக்கம், முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்,
வருமானத்திற்கு அதிகமான சொத்து
பணப்பரிவர்த்தனை செய்த ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் 2016 - 2021 காலகட்டத்தில் கரூரில் ரெயின்போ ட்ரையர்ஸ் மற்றும் ரெயின்போ ப்ளூ மெடல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு சொத்துகளை வாங்கியதாக தெரியவந்துள்ளது. இதில் விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமி பார்ட்னராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பாய்ந்தது வழக்கு
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 55 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த 35 ஆண்டுகளாக தான் செய்த பல்வேறு தொழில்களின் மூலம் சேர்த்த வருமானம் இது. எனக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment