புதிய ஒன்றிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு எந்தெந்த துறை? அமித் ஷாவுக்கு புதிய துறை! எல்.முருகனுக்கு?
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிய கூட்டுறவுத் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை, கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு, இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 43 பேர் ஒன்றிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட 15 பேர் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் உள்ளிட்டோர் ஒன்றிய இணை அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர். முன்னதாக, ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் தங்களது ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிதாக ஒன்றிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிய கூட்டுறவுத் துறை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கூடுதலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment