கிட்ட நெருங்கிடுச்சு; ஜிகா வைரஸ் பாதிப்பால் அரசு எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

கிட்ட நெருங்கிடுச்சு; ஜிகா வைரஸ் பாதிப்பால் அரசு எச்சரிக்கை!

கிட்ட நெருங்கிடுச்சு; ஜிகா வைரஸ் பாதிப்பால் அரசு எச்சரிக்கை!


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பாடாய் படுத்தி எடுத்துவிட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் வரும் நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் பலருக்கும் பரவியிருப்பது அச்சத்தை கூட்டுகிறது. இதையொட்டி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றில் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆய்வு

இதுதொடர்பாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வார்டுகளில் ஆஷா பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். கள நிலவரம் என்னவென்று பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை ஆணையர் கே.வி. திரிலோக் சந்திரா அறிவுறுத்தியுள்ளார்.ஜிகா வைரஸ் பாதிப்பு

குறிப்பாக சாம்ராஜ் நகர், தக்‌ஷின கன்னடா மற்றும் உடுப்பி ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புண்டு. இதன்மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பு பரவும். எனவே திடக்கழிவுகளை அகற்றும் போது சரியான முறையில் கையாண்டு கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்ஓரிடத்தில் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மொத்தமுள்ள 31 மாவட்டங்களின் நோய்க் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் யுக்திகள் வகுத்து முதல்கட்ட தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். விமானங்கள், ரயில் விமானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் மற்றும் உறவினர்கள்

No comments:

Post a Comment

Post Top Ad