டெல்லி வேண்டாம், மதுரை ஓகே; ரூட்டை திருப்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

டெல்லி வேண்டாம், மதுரை ஓகே; ரூட்டை திருப்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

டெல்லி வேண்டாம், மதுரை ஓகே; ரூட்டை திருப்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்டு என இருப்பிற்கு ஏற்ப தமிழக மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான மத்திய அரசின் தடுப்பூசி ஒதுக்கீட்டில் முதல்கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகள் மட்டும் வந்து சேர்ந்தன. இவை தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது. தற்போது தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் பெரும்பாலான மையங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் கடிதம்

இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை நாளை (ஜூலை 9) நேரில் சந்திக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் திட்டமிட்டிருந்தார்.

டெல்லி பயணம் ரத்து

இந்நிலையில் நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது. அதன்படி, மன்சுக் மாண்டாவியா புதிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் தமிழக அமைச்சர் சுப்பிரமணியனின் டெல்லி பயணத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

சுகாதாரத்துறை செயலர் முக்கியத் தகவல்


புதிய சுகாதாரத்துறை அமைச்சர் என்னை சந்திக்க அனுமதி கொடுத்தால் டெல்லி செல்ல தயாராக உள்ளேன். அடுத்து நேரம் கொடுக்கும் போது டெல்லி செல்வேன். இன்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி செல்லவிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை மதுரைக்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad