அது அவர் சொந்த கருத்தாம்: சி.வி.சண்முகமே சொல்லிட்டார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

அது அவர் சொந்த கருத்தாம்: சி.வி.சண்முகமே சொல்லிட்டார்!

அது அவர் சொந்த கருத்தாம்: சி.வி.சண்முகமே சொல்லிட்டார்!


விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்குட்பட்ட நாட்டார்மங்கலம் கிராமத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னால் அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “மயிலம் தொகுதி வெற்றி பெற்றிருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நானும் மயிலம் தொகுதியை சேர்ந்தவன் என்கின்ற முறையில் அனைத்து பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

மயிலம் தொகுதியில் குளம் தூர்வாருதல், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சுமார் 100 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க இருந்த நிலையில் தற்போது திமுக அரசு மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்திருக்கிறது. அதற்கு அவர்கள் (திமுக) தேர்தல் பரப்புரையில் கூறிய கலெக்ஷன் கரப்ஷன் தான் காரணம். யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். திமுகவினர் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களுக்கு இந்த நிலைமை என்றால் இன்னும் குறை காலத்திற்கு என்னென்ன நடக்கப் போகிறது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்" என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், "அண்ணா திராவிட முன்னேற்ற கழக தோல்வி குறித்து நான் கூறிய கருத்து என்னுடைய சொந்த கருத்து. எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்று நாங்கள் செயல்படுவோம். தலைமை ஒருங்கிணைப்பாளர் சொன்ன கருத்தை நான் மறுத்ததாகவும் அது அவருடைய சொந்தக் கருத்து என்று கூறியதாகவும் வேண்டுமென்றே சில பத்திரிகைகள் திரித்து கூறுவது ஏற்புடையது அல்ல இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad