பலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்..! Small Business Ideas in Tamilnadu Villages in Tamil
இந்த தொழில் துவங்குவதற்கு முதலில் நாம் இந்த வேஃபில் மிஷினை வாங்க வேண்டும். இந்த இயந்திரமானது ரூ.6,900 முதல் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது.
தேவைப்படும் மூலப்பொருள்:
மைதா மாவு
முட்டை
பால்
சர்க்கரை
பேக்கிங் பவுடர்
ஆயில்
வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்
வேஃபில் செய்முறை விளக்கம்:
வேஃபில் தயார் செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் மேலே கூறப்பட்டுள்ள மைதா மாவு, முட்டை, வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட், பால், சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஆயில் அனைத்தையும் தேவையான அளவுடன் எடுத்து பவுலில் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அடுத்து வேஃபில் மிஷினை மீடியமான அளவிற்கு ஹீட் செய்து கொள்ளவேண்டும். இந்த மிஷினை நாம் கரண்ட் அல்லது பேட்டரி மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மிஷினை ஹீட் செய்த பிறகு பவுலில் கலந்து வைத்துள்ளதை இந்த மிஷினில் ஊற்றி மிஷினின் மேல் மூடியை அழுத்திய பின் மூடி வைக்கவும்.
அடுத்து 2 முதல் 3 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பின் வெளியில் எடுத்துக்கொள்ளலாம். இப்போது வேஃபில் ரெடி.
ரெடியான வேஃபிலில் வாடிக்கையாளர்கள் கேட்கும் சாக்லேட், வெண்ணிலா போன்ற எஸ்சென்ஸை சேர்த்து கொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
முதலீடு:
இயந்திரத்தின் விலை ரூ.6,900+
மூலப்பொருள் ரூ.5,000/-
மொத்த முதலீடு தொகை = ரூ.12,000/- இருந்தால் இந்த தொழிலை தொடங்கலாம்.
சந்தை லாபம்:
வேஃபில் பிசினெஸ்ஸை டிபார்ட்மென்டல் ஸ்டார், வணிக வளாகம், தெரு முனைகளில், மக்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த தொழிலை ஆரம்பித்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
விற்பனை முறை:
ஒரு வேஃபில் செய்வதற்கு ரூ.25 ஆகும். 25 ரூபாய்க்கு செய்த வேஃபிலை ரூ.50/- வரை விற்பனை செய்யலாம்.
Small Business Ideas in Tamilnadu Villages in Tamil – லாப விவரம்:
ஒரு வேஃபில்க்கு ரூ.25/- லாபம் கிடைக்கும். தினமும் 100 வேஃபில் செய்தால் 100*25= ரூ.2,500/- லாபம் கிடைக்கும்.
மாதத்திற்கு ரூ.75,000/- லாபம் பார்க்கலாம்.
கடை மூலமாக மட்டும் அல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வந்தால் நிறைய லாபம் கிடைக்கும்.
மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களில் இந்த வேஃபில் பிசினெஸ் தொழிலை துவங்கினால் எதிர்ப்பாராத அளவிற்கு தினமும் லாபத்தை அடையலாம். சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் யோசிக்காமல் இப்போதே தொடங்குங்கள்.
No comments:
Post a Comment