கொரோனா பரவல் குறையாதது ஏன்? - WHO மூத்த விஞ்ஞானி விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

கொரோனா பரவல் குறையாதது ஏன்? - WHO மூத்த விஞ்ஞானி விளக்கம்!

கொரோனா பரவல் குறையாதது ஏன்? - WHO மூத்த விஞ்ஞானி விளக்கம்!


டெல்டா வகை வைரஸ் மற்றும் மெதுவாக தடுப்பூசி போடுவதால், சர்வதேச அளவில் கொரோனா பரவல் குறையவில்லை என,
உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5ல் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் மரணம் அடைபவர்களின் விகிதம், கடந்த இரண்டு வாரங்களில் 30ல் இருந்து 40 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தொற்று பரவல் வேகம் குறையவில்லை.

டெல்டா வகை வைரஸ், மக்கள் கூடுதல், ஊரடங்கில் தளர்வு, தடுப்பூசி போடுவது அதிகரிக்கவில்லை. இதனால், பரவல் அதிகரிக்கிறது. முதலில் தோன்றிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 3 பேருக்கு தொற்று ஏற்படும். அதுவே, டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் மூலம் 8 பேருக்கு பாதிப்பு ஏற்படும்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம், சமூக இடைவெளியை பொது இடங்களில் மக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். முடிந்த வரை, விரைவில், கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி ஒன்றே கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் பேராயுதம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad