திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனிமே ரொம்ப ஈஸி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனிமே ரொம்ப ஈஸி!

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனிமே ரொம்ப ஈஸி!



திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் குவிந்த நிலையில் கொரோனா வந்து அதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டாலும் கூட்டத்தில் வரிசையில் நின்றே பக்தர்களுக்கு வயதாகிவிடும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக பக்தர்கள், தங்கும் அறைகளை எடுக்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.
அறைகளை பதிவு செய்ய, அறைகள் வாங்க, சாவி வாங்க என தனித்தனி வரிசைகளில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தானத்துக்கு புகார்கள் சென்றன. அதைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமலையில் ஜிஎன்சி சுங்கச் சாவடி, பாலாஜி பேருந்து நிலையம், கவுஸ்தபம் தங்கும் விடுதி, ராம்பக்கீச்சா தங்கும் விடுதிகள், எம்பிசி உள்ளிட்ட 6 இடங்களில் அறைகள் பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டன. பக்தர்கள் ஆன்லைன் மூலம் ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் குறிப்பிட்ட நாளில் அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அதில் குறிப்பிட்டுள்ள இடத்துக்கு பக்தர்கள் சென்று, அந்த தகவலை காண்பித்து, அறைக்கான சாவியை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.ஆன்லைனில் முன் பதிவு செய்யாமல் நேரில் வரும் பக்தர்கள், இந்த ஆறு மையங்களில் ஏதேனும் ஒன்றில் ஆதார் அட்டையை காண்பித்து அறையை பதிவு செய்து கொள்ளலாம். அரை மணி நேரத்துக்குள் அவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு, அதற்கான தகவல் அவர்களின் செல்போனுக்கு சென்றுவிடும். பின்னர் பணம் செலுத்தி விட்டு, குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சாவியை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad