குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை: முதல்வர் ஸ்டாலின் சொன்ன சூசகம்
தேர்தல் நேரத்தில் பல உறுதிமொழிகளை கொடுத்துள்ளோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கான மாத உரிமை தொகை திட்டம் குறித்து சூசக பேச்சு
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 29ம் தேதி கொளத்தூர், எவர்வின் பள்ளியில்
நடைபெற்ற நிகழ்ச்சியில்,
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும் வழங்கி ஆற்றிய உரை:
''இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நான் பேசுவதாக வரவில்லை. ஆனால் நீங்களெல்லாம், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர் குரலைக் கேட்க
வேண்டும், அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று நீங்கள் வைத்த
கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன்.
அனிதா அச்சீவர்ஸ்
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் தையல் பயிற்சி கொடுத்து, அதனால் ஆயிரம் பேருக்கும் மேல் பயனடையக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. பெண்களுடைய முன்னேற்றத்திற்கு, மகளிருடைய வாழ்விற்கு எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை
இப்போது ஆட்சிக்கு வந்து மட்டுமல்ல, தொடர்ந்து கலைஞருடைய காலத்தில் 5 முறை ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது,
இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய கழக ஆட்சியின் சார்பில் பல திட்டங்களையெல்லாம் தீட்டி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.
No comments:
Post a Comment