சமூக வலைதளங்களில் தலிபான்களுக்கு ஆதரவு: 14 பேர் அதிரடி கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

சமூக வலைதளங்களில் தலிபான்களுக்கு ஆதரவு: 14 பேர் அதிரடி கைது!

 சமூக வலைதளங்களில் தலிபான்களுக்கு ஆதரவு: 14 பேர் அதிரடி கைது!

அசாம் மாநிலத்தில், சமூக வலைதளங்களில் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதை அடுத்து, தலிபான் அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போரின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் என, சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் அறிவித்தது. தொடர்ந்து, தலிபான் அமைப்பினர் வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்தியாவில், தலிபான் அமைப்புக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வட கிழக்கு மாநிலமான அசாமில், தலிபான் அமைப்புக்கு ஆதரவுத் தெரிவித்தும், இந்தியா மீது அவதூறு பரப்பிய 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் இருந்து ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது போல் கருத்துத் தெரிவிக்கும் நபர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படியும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad