திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் நியூஸ்; அதுவும் நாடு முழுவதுமாம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் நியூஸ்; அதுவும் நாடு முழுவதுமாம்!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் நியூஸ்; அதுவும் நாடு முழுவதுமாம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள அன்னமையா பவனில் தேவஸ்தானம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 21) சீராய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி, வேதங்கள் குறித்த அறிவை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து வேத பாட சாலைகளும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

பல்கலைக்கழகத்துடன் இணைப்பு

இதன் தொடக்கமாக தேவஸ்தானத்தின் வேத பாடசாலைகள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விழியநகரம், கொட்டப்ப கொண்டா பாடசாலைகள் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வேத பாடசாலைகளின் முதல்வர்களும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குழுவினரும் இணைந்து பொதுவான பாடத்திட்டம்,


ஆலோசனைக் கூட்டம்

தேர்வு முறை, சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசித்து முடிவெடுக்க உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி வேத பாடசாலைகளின் மேம்பாட்டிற்காக ஒவ்வொரு மாதமும் முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். பாடப்புத்தகங்களில் ஒவ்வொரு மந்திரத்தின் அர்த்தமும், விரிவான விளக்கமும், சமூகத்தில் எந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பன பற்றியும் தகவல்கள் இடம்பெற வேண்டும்.

விழாக்களில் நேரடி பங்கேற்பு

இதனை மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படும் வகையில் உருவாக்க வேண்டும். வேத பாடசாலைகளில் மாணவர்கள் - ஆசிரியர்கள் விகிதாச்சாரத்தின் படி, பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

வேதபாராயணம், புராண பத்னம், பிரவச்சனம் ஆகியவற்றில் உரிய திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். மாணவர்கள் நேரடி அனுபவங்களை பெறும் வகையில் திருமலை மற்றும் திருச்சானூர் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் அவ்வப்போது கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad