கர்நாடகாவிற்குள் நுழைவதில் புதிய சிக்கல்; கொந்தளிக்கும் கேரளா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

கர்நாடகாவிற்குள் நுழைவதில் புதிய சிக்கல்; கொந்தளிக்கும் கேரளா!

கர்நாடகாவிற்குள் நுழைவதில் புதிய சிக்கல்; கொந்தளிக்கும் கேரளா!

நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா, கேரளா ஆகியவை இருக்கின்றன. இங்கிருந்து வரும் பயணிகளுக்கு கர்நாடக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனை மூலம் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் சமர்பிக்க வேண்டும். முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் நெகடிவ் சான்று கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனெனில் மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு RT-PCR பரிசோதனை மூலம் பெற்ற நெகடிவ் சான்று கட்டாயமில்லை.

நெகடிவ் சான்று கட்டாயம்

இதை வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு கேரள அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஒன்று RT-PCR நெகடிவ் சான்று கேட்க வேண்டும். இல்லையெனில் முழுவதுமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை கேட்க வேண்டும். அதைவிடுத்து எப்படியிருந்தாலும் நெகடிவ் சான்று மட்டும் கட்டாயம் என்று கேட்பதில்லை நியாயமில்லை என்று கடிதம் மூலம் கேரள அரசு தெரிவித்திருந்தது.

எல்லையில் ஆர்ப்பாட்டம்

இந்த சம்பவத்தை ஒட்டி கேரளாவை சேர்ந்த பயணிகளும், அரசியல் கட்சிகளும் மங்களூரு அருகேவுள்ள தலப்பாடி எல்லைப் பகுதியில் கடந்த 8ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆவணங்களை தீயிட்ட ு எரித்து தங்களின் எதிர்ப்பை காட்டினர். ஆனால் கர்நாடக அரசு இந்த விஷயத்தில் பிடிவாதம் காட்டி வருகிறது.

கேரளா தான் காரணமா?

ஏனெனில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட கொரோனாவின் இரண்டு அலைகளுக்கும் கேரளாவில் இருந்து திரும்பிய கல்லூரி மாணவர்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தக்‌ஷின கன்னடா மற்றும் பெங்களூருவில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதுதொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், ஏற்கனவே முதல் இரண்டு அலைகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறோம்.

எனவே மூன்றாவது அலையை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் RT-PCR நெகடிவ் சான்று இல்லாமல் கேரளாவில் இருந்து சிலர் கர்நாடக மாநிலத்திற்குள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் அறிகுறிகளற்ற நிலையில் கொரோனாவை பரப்பும் மீடியேட்டர்களாக மாறும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad