அடேங்கப்பா, செமயான 20 அறிவிப்புகள்: அமைச்சர் வெளியிட்டார்!
தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
“1. தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இதற்கென சிறப்பு நிதியாக ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
2. அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் இதற்கென தொடர் செலவினம் ஆக ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
3.
பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறிவுத் தேர்வு நடத்தி ஆண்டுதோறும் 1500 பேர் தேர்வு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக திங்கள் தோறும் ரூபாய் 1500 வழங்கப்படும்
4. திருக்குறள் முற்றோதல் செய்து பரிசு தொகை வழங்காமல் நிலுவையில் உள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு குறள் பரிசு வழங்கப்படும் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்ச வரம்பும் நீக்கப்பட்டு பரிசுத் தொகை உயர்த்தப் படும்
5. தமிழ் அறிஞர்களான சிலம்பொலி செல்லப்பன், முனைவர் பரமசிவன்,புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம் மற்றும் புலவர் ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத் தொகை வழங்கப்படும்
6. சங்க இலக்கிய வாழ்வியல், ஓவியங்களாகவும் எளிய விளக்கத்துடனும் காஃபி மேசை புத்தகமாக வெளியிடப்படும் இதற்கென ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்
7. திருக்கோயில்களில்
தேவாரம் திருவாசகம் திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்
8. தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த ரூபாய் 15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்
9. புகழ்பெற்ற தலைவர்கள் தமிழறிஞர்களின் ஒலி ஒளி பொழிவுகள் ஆவணம் ஆக்கப்படும் இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்
No comments:
Post a Comment