"ரகசியம்... பரம ரகசியம்!" - போட்டுடைத்த ஓ.பி.எஸ்., - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

"ரகசியம்... பரம ரகசியம்!" - போட்டுடைத்த ஓ.பி.எஸ்.,

"ரகசியம்... பரம ரகசியம்!" - போட்டுடைத்த ஓ.பி.எஸ்.,

சட்டப்பேரவையில், நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு இது தான் என் நிலைமை என கூறியது, பரம ரகசியம் என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர். ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில், தி.மு.க., தலைவரும், தமிழக முதலமைச்சருமான, மு.க. ஸ்டாலின், மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்த திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தன்னிச்சையாக ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாச்சி தத்தவத்திற்கு எதிரானது. அதனால் தான் இந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியுள்ளது. இந்த மூன்று வேளாண் சட்டங்களும் உழவர்களுக்கு எதிரானது தான்.

இந்த நாட்டில் இருந்து விவசாயிகள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். நெற்றி வியர்வை சிந்தி உழைக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை. குறைந்தபட்ச ஆதாய விலை என்பது குறைந்த பட்சம் வாய் வார்த்தைக்கு கூட கிடைக்காத சட்டங்கள் தான் இச்சட்டங்கள்” என்றார்.

அப்போது, இது தொடர்பாக பேசிய, முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான, ஓ.பன்னீர்செல்வம், இந்த விவகாரத்தில், நதியினில் வெள்ளம்... கரையினில் நெருப்பு... இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு... இதுதான் என் நிலைமை என தெரிவித்தார். மேலும், தனது நிலைமை அவை முன்னவருக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று, விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக் கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிறிது நேரத்திற்குப் பின், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad