''வலிமை'' என்ற பெயரில் சிமெண்ட்: தமிழக அரசின் சட்டசபை அப்டேட் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

''வலிமை'' என்ற பெயரில் சிமெண்ட்: தமிழக அரசின் சட்டசபை அப்டேட்

''வலிமை'' என்ற பெயரில் சிமெண்ட்: தமிழக அரசின் சட்டசபை அப்டேட்

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக தல ரசிகர்கள் தீவிரமாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் 'வலிமை' என்ற பெயர் தமிழக சட்டசபையிலும் ஒலித்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் தொழில்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை குறித்து உரையாற்றினார்.
அப்போது பேசியவர், ''விருதுநகரில் ரூபாய் 400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா உருவாக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பில் 5.90 கோடியில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும். கிருஷ்ணகிரி சூளகிரி சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடியில் நகர் திறன் பூங்கா உருவாக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் செங்காத்தாகுளத்தில் ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

"வலிமை" என்கிற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு சிமெண்ட் வணிகப்பெயருடன் வலிமை என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்ட் இந்த ஆண்டு வெளிச்சந்தையில் தமிழ்நாடு அரசு சார்பாக அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அனைவரும் பிறப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் முன் எழுத்தை தமிழில் எழுதும் நடைமுறையை பள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த் நடைமுறையை பொதுமக்களும் பொது பயன்பாடுகளில் பின்பற்ற ஊக்கிவிக்கப்டும் என்றும் அமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசியவர், மின்வாகன உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் மின்வாகன கொள்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad