கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: ஆகஸ்ட் 25 வரை இதுதான் நிலைமை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: ஆகஸ்ட் 25 வரை இதுதான் நிலைமை!

கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: ஆகஸ்ட் 25 வரை இதுதான் நிலைமை!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்த நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளும், வழிமுறைகளும் விதிக்கப்படாமல் எங்கு பாதிப்புகள் அதிகமாகிறதோ அங்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
இதனால் கடைகள் திறந்திருக்கும் நேரம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாறுபடுகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, காட்டாம் பூண்டி உள்ளிட்ட சில மருத்துவ வட்டார பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 16) முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். மேலும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad