மீண்டும் ஓர் எச்சரிக்கை; 3வது அலை எப்போது வரும்? எய்ம்ஸ் இயக்குநர்!
இந்தியாவில் கடந்த மே 21ஆம் தேதி உச்சம் தொட்ட கொரோனா இரண்டாவது அலை, அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது தினசரி நோய்த்தொற்று 35 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. நேற்று புதிதாக 33,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேசமயம் 35,497 பேர் குணமாக
ி வீடு திரும்பியுள்ளனர். 421 பேர் பலியாகி இருக்கின்றனர். அடுத்ததாக மூன்றாவது அலை வருமா? இல்லை இந்தியாவில் கொரோனாவின் ஆட்டம் முடிவுக்கு வருமா? என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதுதொடர்பாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
மூன்றாவது அலை
அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் கொரோனா கட்டுப்பாடுகளை எந்தளவிற்கு பின்பற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே
அமையும். அதேசமயம் இரண்டாவது அலையை போல் மிகவும் உக்கிரம் காட்டாது என்றே தோன்றுகிறது. கொரொனா
தடுப்பூசி போடாத காரணத்தால் குழந்தைகள் அதிக அளவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாக வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு கொரோனா
எனவே நாம் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்கள் பெங்களூருவில் மட்டும் 543 குழந்தைகள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியிருக்கின்றனர். அதில் 0-9 வயதுக்கு உட்பட்டவர்கள் 88 பேர், 10-19 வயதுக்கு உட்பட்டவர்கள் 305 பேர் என்று தெரியவந்துள்ளது. அதிலும் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment