பள்ளி பாடத்திட்டத்தில் புதிய அறிமுகம்; முதல்வர் அறிவிப்பால் உற்சாகம்!
நாட்டின் 75வது சுதந்திர தினம் நேற்று சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதல்வர், கடந்த 74 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இயற்பியல் முதல் வேதியியல் வரை, கணிதம் முதல் புவியியல் வரை பல்வேறு பாடங்களை பள்ளி மாணவர்களுக்கு கற்று தந்திருக்கிறோம்.
தேசப்பக்தி பாடம்
ஆனால் தேசப்பக்தியை கற்றுத் தரவில்லை. தற்போது
அதற்கான நேரம் வந்திருக்கிறது. வரும் செப்டம்பர் 27ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளில், அரசுப் பள்ளிகளில் தேசப்பக்தி பாடத்திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்படும். இது இளம்பருவத்தில் நாட்டிற்காக பகத்சிங் செய்த தியாகத்தை நினைவுகூறும் வகையில் இருக்கும்.
டெல்லி அரசு முடிவு
தேசபக்தி உணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அளிக்கப்படும். இதன்மூலம் தேசத்தின் நலனுக்காக மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். உரிய நேரத்தில் நாம் செய்ய வேண்டிய தியாகங்கள் குறித்து கற்பிக்கப்படும் என்று கூறினார். அனைத்து மாநிலங்களிலும் சைனிக் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் டெல்லியில் இல்லை.
No comments:
Post a Comment