திருப்பதி பக்தர்களுக்கு ருசிகர அறிவிப்பு: லட்டு மட்டுமல்ல சாப்பாடும் தான்!
திருமலை திருப்பதியில் உள்ள கூடுதல் செயலர் அதிகாரி அலுவலகத்தில் 75ஆவது சுதந்திர தின விழா நேற்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இந்த விழாவில் தலைமை செயல் அதிகாரி ஜவஹர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
கூடுதல் செயல் அதிகாரி தர்மா பேசும் போது, “சுவாமி நைவேத்தியத்திற்கு
அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்டவை இயற்கை வேளாண் பொருட்களை கொண்டும், நாட்டு மாடுகளின் நெய் பயன்படுத்தி நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி முதல் நவநீத சேவை திட்டம் தொடங்கப்பட்டு நாட்டு மாடுகளின் நெய் பக்தர்களிடம் நன்கொடை பெறும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.
அன்னதான திட்டத்தில்
புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் சம்பிரதாய போஜனம் என்ற பெயரில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு தேவஸ்தானம் சார்பில் நான்கு இடங்களில் உணவகங்கள் தொடங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment