கொரோனா 3வது அலை எப்போது தீவிரமடையும்? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில், வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை தீவிரமடையும் என, ஐ.ஐ.டி., கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில், கடந்த ஏப்ரல் - மே மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது
அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது நாட்டில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.
முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் அமல்படுத்தியதன் விளைவாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் குறைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தாக்கம் குறைந்திருந்தாலும்,
கேரள மாநிலத்தில் மட்டும் நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. அதனால் அம்மாநிலத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை செப்டம்பர் மாதத்தில் தாக்கக் கூடும் என்றும், அப்போது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவர் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில், இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது
அலை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தீவிரமடையும் என, ஐ.ஐ.டி., கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் வந்த புள்ளி விவரங்களை கொண்டு ஐ.ஐ.டி., கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment