6ஆம் வகுப்பு முதல்..: மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்க உத்தேசித்து வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. பள்ளிகள் திறப்பு குறித்த நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
ஒன்றரை ஆண்டுகளாக வகுப்புகள் பூட்டிக் கிடந்த நிலையில் சுத்தம் செய்து தயார் செய்யப்பட்டு வருகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நேற்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தினர். செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க மாணவர்களின் பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மனச் சோர்வு அடையாமல் இருக்க போட்டிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
பள்ளிக்கல்வியில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்
ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஆன்லைன் மூலமாக கல்வி கற்கும் மாணவர்கள் மொபைல், லேப்டாப் பயன்படுத்தி பாடம் படிக்கின்றனர். இந்நிலையில் ஆறாம் வகுப்பிலிருந்தே கணினி அறிவியல் பாடம் எடுக்கப்பட்டால் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் போது கணினி குறித்த அடிப்படை அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment