அசெம்பிளியை ஆர்ட்ஸ் காலேஜ் ரேஞ்சுக்கு ஆக்கிய அதிமுகவினர்... இதுதான் விஷயம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

அசெம்பிளியை ஆர்ட்ஸ் காலேஜ் ரேஞ்சுக்கு ஆக்கிய அதிமுகவினர்... இதுதான் விஷயம்!

அசெம்பிளியை ஆர்ட்ஸ் காலேஜ் ரேஞ்சுக்கு ஆக்கிய அதிமுகவினர்... இதுதான் விஷயம்!

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது கூச்சலிட்டப்படி ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று சபை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு பங்களா சம்பவங்கள் குறித்து பேச முயன்றார்.

அப்போது இந்த விவகாரம் குறித்து முன் அனுமதி இல்லாமல் பேச கூடாதென சபாநாயகர் அப்பாவு கண்டிப்புடன் தெரிவித்தார். சபாநாயகரின் பேச்சை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், இபிஎஸ் தொடர்ந்து பேசி கொண்டிருந்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் குரல் கொடுத்தனர்.

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அறிவுறுத்திய சபாநாயகர், இபிஎஸ்சின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

இதற்கு எதிர்த்து தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்,'பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம்' என்று கோஷமிட்டபடி, இந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காண்பித்தனர்.

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டிருந்தபோது, அதிமுக எம்எல்ஏ இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் வெளிநடப்பு செய்ய தொடங்கினர்.

அப்போது 'கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில் கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இந்த அரசு தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர வேறல்ல' என்று இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த தொடங்கினார். உடனே அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை லாபியிலும், சட்டசபை வாயிலிலும் நின்றபடி கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad