மதுரை ஆதினமாக பதவியேற்று விட்டேன்: நித்யானந்தா அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

மதுரை ஆதினமாக பதவியேற்று விட்டேன்: நித்யானந்தா அறிவிப்பு!

மதுரை ஆதினமாக பதவியேற்று விட்டேன்: நித்யானந்தா அறிவிப்பு!

மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதியாக கடந்த 1980ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த குருமகா சன்னிதானம் அருணகிரி நாதர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல், முனிச்சாலையில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மதுரை ஆதினத்தின் 293ஆவது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டதாக நித்யானந்தா முகநூலில் அறிவித்துள்ளார்.

293ஆவது பீடாதிபதியாக தான் பதவியேற்றுகொண்டுள்ளதாகவும் இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள நித்யானந்தா, தனது பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், 2019ஆம் ஆண்டு அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad