பள்ளிகள் திறப்பு; தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

பள்ளிகள் திறப்பு; தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்!

பள்ளிகள் திறப்பு; தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்ப ு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் 20ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ளார் அதில்,

கிருமி நாசினி அவசியம்

* பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். காற்றோட்டமான சூழலை பள்ளியில் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கைகழுவுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.



* தொடுதல் இல்லாத தெர்மாமீட்டர், கிருமி நாசினி, சோப்புகள் உள்ளிட்டவை கட்டாயம் போதிய இருப்பு வைத்திருக்க வேண்டும். பள்ளி பேருந்துகள் உரிய முறையில் தூய்மைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கை; மாணவர்களுக்கு பெரிய ஷாக்!

போதிய இடைவெளி கட்டாயம்

* வகுப்பறைகளில் 6 அடி இடைவெளி விட்டு அமரும் வகையில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களில் குறியீடு போட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள், அலுவலக அறை மற்றும் பள்ளியின் அனைத்து இடங்களிலும் போதிய சரீர இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.


* வாய்ப்புகள் இருந்தால் திறந்தவெளி வகுப்பறைகளை கையாளலாம். வகுப்பறைக்குள் செல்ல, வெளியே வர தனித்தனி குறியீடுகள் போட வேண்டும். பள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேட்கள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment

Post Top Ad