டீசல் விலையை குறைக்காததற்கு இதுதான் காரணம்: ஓப்பனாக சொல்லிய பிடிஆர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

டீசல் விலையை குறைக்காததற்கு இதுதான் காரணம்: ஓப்பனாக சொல்லிய பிடிஆர்!

டீசல் விலையை குறைக்காததற்கு இதுதான் காரணம்: ஓப்பனாக சொல்லிய பிடிஆர்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிதிலை அறிக்கை மீதான பொது விவாதம் இன்றும் (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. இந்த விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
“பட்ஜெட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. டீசல் பக்கமும் உங்கள் கவனத்தை திருப்பி இருக்கலாம். டீசல் விலையை குறைத்தால் விவசாயிகள் சந்தோசப்படுவார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.

பொதுமக்கள் மத்தியிலும் இந்த கேள்வி எழுகிறது. இதற்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துப் பேசினார்.

“யார் யார் பெட்ரோல் - டீசல் பயன்படுத்துகிறார்கள் என்ற முழு தகவல் இல்லை. வேறு வகையில் ஆய்வு செய்து பார்த்தோம். அதன்படி விவசாயிகள், மீனவர்கள், போக்குவரத்து துறை, தனியார் வைத்துள்ள பெரிய கார்கள் டீசலில் ஓடுகின்றன.

அதேநேரம் 2 கோடி பேர் பெட்ரோல் மூலம் 2 சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். மீனவர்களுக்கு டீசல் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறையினருக்கும் மானியமாக டீசல் வழங்கப்படுகிறது. பெரிய சொகுசு கார்கள் தனியார் வைத்துள்ளனர். அதனால் பெட்ரோல் விலை குறைத்தால் உறுதியாக அதிகமானோர் பயனடைவார்கள் என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

லாரிகளுக்கு டீசல் மானியம் கொடுத்தால் நேசனல் பெர்மிட் வைத்துக் கொண்டு இயக்கும் உரிமையாளர்களும் இதை தவறாக பயன்படுத்திவிட கூடாது. அதனால் எல்லாமே ஆய்வு செய்து தற்போது பெட்ரோல் விலையை குறைத்துள்ளோம். டீசல் பயன்படுத்துபவர்களுக்கு வேறு வகையில் ஊக்கம் கொடுத்துள்ளோம்” என்று விளக்கமாக பதிலளித்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

No comments:

Post a Comment

Post Top Ad