பெண்கள் ஜாக்கிரதை, சீமானின் செயல் வெட்கக்கேடானது, கொளுத்திப்போட்ட ஜோதிமணி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

பெண்கள் ஜாக்கிரதை, சீமானின் செயல் வெட்கக்கேடானது, கொளுத்திப்போட்ட ஜோதிமணி

பெண்கள் ஜாக்கிரதை, சீமானின் செயல் வெட்கக்கேடானது, கொளுத்திப்போட்ட ஜோதிமணி

தமிழக பாஜக முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்த நிலையில், ராகவனின் விவகாரம் அவரது தனிப்பட்ட விஷயம் என கூறிய சீமான் அதற்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். சீமான் அதுகுறித்து பேசியதாவது
உலகத்தில் எங்குமே நடக்காததையா அவர் செய்துவிட்டார்? ஒருத்தருடைய அனுமதி இல்லமால், படுக்கையறை, கழிவறையில் இருந்து வீடியோ எடுத்து வெளியிடுவதுதான் சமூக குற்றம். ஒருவருடைய தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் பார்ப்பது குற்றம். ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவர் அவரது அறையில் இருப்பது எப்படி குற்றமாகும்? கேடுகெட்ட சமூகமாக நாம் மாறிவிட்டோமோ என்ற பயம்தான் வருகிறது. யார் யாருடன் பேசுகிறார், செய்கிறார் என்பதை ஒட்டுக்கேட்டு வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும்? என சீமான் ஆவேசமாக பேசினார். இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ''பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை, சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. சீமான் ஒரு அரசியல் கட்சகியின் தலைவர். இவர் இப்படி பொறுப்பில்லாமல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.



பாஜகவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமாக அருவருக்கத்தக்க ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் சீமான் போன்றவர்களிடம் பெண்களும், தமிழ் சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம் பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள். பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைக்கு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள்.
பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும் அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதுதான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது.

சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றசாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும், சீமான் பாஜகவின் பி டீம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

எப்படியிருந்தாலும், சீமானின் செயல் வெட்கக்கேடானது. சீமான், கே.டி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும், மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தை புரிந்து கொண்டு அவரை புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு என ஜோதிமணி கூறியுள்ளார்.

ஆனால், சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கே.டி. ராகவனின் தனிப்பட்ட வீடியோவை குறித்தே கருத்து தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad