அழ வைக்கவும் செய்வார், சிரிக்க வைக்கவும் செய்வார்: துரைமுருகனை புகழ்ந்த ஸ்டாலின் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

அழ வைக்கவும் செய்வார், சிரிக்க வைக்கவும் செய்வார்: துரைமுருகனை புகழ்ந்த ஸ்டாலின்

அழ வைக்கவும் செய்வார், சிரிக்க வைக்கவும் செய்வார்: துரைமுருகனை புகழ்ந்த ஸ்டாலின்

தமிழ்நாடு சட்ட பேரவையில் முதலாவது நீர்வளத்துறை மானிய கோரிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
நூறு ஆண்டுகள் பெருமைமிக்க அவையின் 50 ஆண்டு கால உறுப்பினராக துரைமுருகன் இருக்கிறார் என தமிழ்நாடு முதல்வர்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று, தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
“கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர் துரைமுருகன். கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் இழப்புக்குப் பிறகு அவர்களது இடத்தில் துரைமுருகனை வைத்துப் பார்க்கிறேன். கலைஞரின் அருகில் மட்டுமல்ல, அவரது மனதிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்திருப்பவர்.

துரைமுருகனுடன் கலைஞர் பேசிக் கொண்டே இருப்பதைப் பார்க்க பொறாமையாக இருக்கும். மனதில் பட்டத்தை உறுதியுடன் சொல்லக்கூடியவர். எந்தத் துறையைக் கொடுத்தாலும் சிறப்புடன் செயல்படக் கூடியவர். இந்தக் கூட்டத்தை அழ வைக்க நினைத்தால் அழ வைப்பார், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைப்பார்.

No comments:

Post a Comment

Post Top Ad