உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் பட்டியலில் பெண்களே மெஜாரிட்டி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் பட்டியலில் பெண்களே மெஜாரிட்டி..!

 உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் பட்டியலில் பெண்களே மெஜாரிட்டி..!

9 மாவட்டங்களிலும் 76.59 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதியானர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் விடுபட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை 9 மாவட்டங்களில் டிசம்பர் 15ஆம் தேதிக்குள்உள்ளாட்சி தேர்தலை நடத்த ி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு மற்றும் வாக்காளர் விவரங்கள் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

அதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்காக தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல்களில் உள்ள மார்ச் 19 அன்று வெளியிடப்பட்ட விவரங்களை அடிப்படையாக கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாரித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின்

வாக்காளர் பதிவு அலுவலகர்களால் இன்று வெளியிடப்பட்டன.

9 மாவட்டங்களின் வாக்காளர்கள் நிலவரம்

1. செங்கல்பட்டு - 1154933

2. கள்ளக்குறிச்சி - 961770

3. காஞ்சிபுரம் - 681731

4. ராணிப்பேட்டை - 667237

5. தென்காசி - 755402

6. திருநெல்வேலி - 673868


7. திருப்பத்தூர் - 664108

8. வேலூர் - 716984

9. விழுப்புரம் - 1383687

No comments:

Post a Comment

Post Top Ad