குறைவான நீரை வழங்கும் கர்நாடகா: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

குறைவான நீரை வழங்கும் கர்நாடகா: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்!

குறைவான நீரை வழங்கும் கர்நாடகா: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13ஆவது கூட்டம் இன்று டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தின் கூட்ட அரங்கில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் துவக்கத்திலேயே மேகதாது குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். கர்நாடகாவின் மேகதாது அணை குறித்த டி.பி.ஆர் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இயத வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அதனால் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது எனவும், மேகதாது விவகாரத்தில் நான்கு மாநிலங்களும் சம்மதித்தால் மட்டுமே விவாதிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தவிர்த்தது. மேலும் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி இம்மாதம் வரை 86.380 டி.எம்.சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால் 30.8.2021 வரை 57.042 டி.எம்.சி நீரை மட்டுமே வழங்கியுள்ளது. இன்னும் 27.86 டி.எம்.சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்காமல் இருக்கவும், சம்பா பயிர் செய்யவும் நிலுவையில் உள்ள நீரை கர்நாடகா உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி நீர் பங்கீட்டை கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டும் என வாதாடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட கர்நாடக அதிகாரிகள், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாகக் கூட காவிரியில் சுமார் 14 ஆயிரம் கன அடி நீர் திறயது விடப்பட்டுள்ளது என தெரிவித்தனர். 30.8.2021 வரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மீதமுள்ள 27.86 டி.எம்.சி நீரையும் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய நீரையும் உரிய காலத்திற்குள் தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என்று காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் அடுத்த 14 வது கூட்டம் செப்டம்பர் 24ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “தமிழகத்திற்கு கர்நாடகா குறையத அளவே நீர் வழங்கியுள்ளதாகவும், குறுவை மற்றும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக நிலுவையில் வழங்க வேண்டிய தண்ணீரையும், செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் வரை 86.38 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் 30.8.2021 வரை 57.04 டி.எம்.சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நிலுவையிலுள்ள 27.86 டி.எம்.சி தண்ணீரையும், செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் உடனே வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளோம். அவர்களும் செப்டம்பர் இறுதிக்குள் வழங்குவதாக கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad