உள்ளாட்சி தேர்தல் இறுதி கட்டம், வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
தமிழகத்தில் விடுபட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை 9 மாவட்டங்களில் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல்
வியூகங்களை ஊரக கிளை செயலாளர் முதல் கட்சியின் தலைவர்கள் வரை வகுத்து வருகின்றனர். இந்நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே பணிகளை முடங்கியுள்ளது.
இச்சூசுழலில் மேற்கண்ட மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். வாக்காளர் இறுதி பட்டியல் வெளிவந்ததையடுத்து ஓரிரு நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் ஆகியவற்றை குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசன
ை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கட்சி தாவல் சம்பவங்களும் நடந்து வருகிறது.
நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அனுபவம் உள்ள மற்றும் அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என 9 மாவட்ட ஆட்சியர்களுக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment