வீடியோ விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்ட அண்ணாமலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

வீடியோ விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்ட அண்ணாமலை!

வீடியோ விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்ட அண்ணாமலை!

தமிழக பாஜக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்றை பாஜகவை சேர்ந்த மதன் வெளியிட்டார். இதையடுத்து, கே.டி.ராகவன் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அந்த வீடியோவை மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடனேயே வெளியிட்டதாகவும் மதன் கூறியிருந்தார்.

ஆனால், வீடியோவை ஒப்படைத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியும் மதன் மறுத்துடன் வீடியோவை வெளியிட்டு விட்டதாக அறிக்கை மூலம் அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட மதன், வென்பா ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கபப்ட்டனர். அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையிடம் வீடியோவை காண்பித்து அவரது ஒப்புதலுடனேயே வீடியோவை வெளியிட்டதாக கூறி, அண்ணாமலையை சந்தித்தபோது, அவருடன் நடைபெற்ற உரையாடல் என்று ஆதாரமாக மற்றொரு வீடியோ ஒன்றை மதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில், “நான் அறிக்கையில் சொன்னதற்கும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது” என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அண்ணாமலை முதல் முறையாக இன்று புதுச்சேரி வந்தார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய அவர், செய்தியாளர்களை சந்தித்த போது மதனின் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
அது என் மனைவிதான், பாஜகவில் தலித் பெண்களை சீரழிக்கின்றனர் - ஆபாச வீடியோ பரபரப்பு
அப்போது பேசிய அவர், “அந்த பத்திரிகையாளர் எதற்கு என்னை சந்தித்தார். அப்போது நான் என்ன பேசினேன் என்று நான் அறிக்கையில் சொன்னதற்கும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது. அவர் முறைப்படி அந்த வீடியோ டேப்பை என்னிடம் கொடுத்திருந்தால் கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருப்போம்” என்று விளக்கம் அளித்தார்.

அந்த வீடியோவை கொடுக்க ஆர்வமில்லாமல் அவர் வெளியிட்டுள்ளாதாக குறிப்பிட்ட அண்ணாமலை, அந்த பத்திரிகையாளர் முதல் வீடியோவில் கட்சியை சார்ந்தும், நிர்வாகிகளை சார்ந்தும், பெண் நிர்வாகிகள் சார்ந்தும் சில விஷயங்கள் பேசியுள்ளார். அது சம்பந்தமாக குழு அமைத்து, அந்தக் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். அக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். அறிக்கைக்கும், வீடியோவுக்கும் மாறுபாடு இல்லை என்று தெரிவித்ததன் மூலம் மதன் வெளியிட்ட அண்ணாமலை தொடர்பான வீடியோ உண்மை என்று அண்ணாமலை ஒப்புக் கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad