வீட்டிலேயே சான்றிதழ்களை பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

வீட்டிலேயே சான்றிதழ்களை பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு!

 வீட்டிலேயே சான்றிதழ்களை பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு!

வருவாய் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேரவையில் கோரிக்கை வைத்தார்.

இதற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்து பேசியதாவது: “பஞ்சமி நிலத்தை பொருத்தவரை 1,47,200 ஏக்கர் நிலங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலங்கள் தற்போது அவர்கள் மக்கள் கையில் உள்ளதா அல்லது வேறு தனியார் நிறுவனங்கள் ஏதேனும் ஆக்கிரமித்துள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் அறிக்கையின் அடிபபடையில் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் உரிமையாளர்களிடம் அந்நிலத்தை பெற்றுத் தரநடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதேபோல், துறை ரீதியான சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பேரவையில் கோரிக்கை வைத்தார்.

இதற்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பதில் அளித்து பேசுகையில், “வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம். அதற்கான தெளிவுரைகள் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழை சமர்ப்பிக்க இசேவை மையத்துக்கு செல்ல தேவையில்லை என்றார்.

மேலும் இசேவை மையத்தின் மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளும் எளிமையாக்கபட்டுள்ளதாக தெரிவித்த அவர், இசேவை மையத்தின் மூலம் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான துறை சார்ந்த சான்றிதழ்களை கணினி வாயிலாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad