பிச்சை எடுக்க தடை; மீறினால் சிறை தண்டனை - அரசு அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

பிச்சை எடுக்க தடை; மீறினால் சிறை தண்டனை - அரசு அதிரடி!

பிச்சை எடுக்க தடை; மீறினால் சிறை தண்டனை - அரசு அதிரடி!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என, அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான லாகோஸ் மாகாணத்தில், தெருக்களில் பிச்சை எடுக்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மம் கேட்பவர்களுக்கும், தெரு வியாபாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
லாகோஸ் மாகாண அரசு, அவர்களை தொந்தரவாக கருதுவதாகவும், எனவே மாகாணத்தில், இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு பிச்சை எடுப்பவர்களை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அக் குழு இயங்கத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, லாகோஸ் மாகாணத்தின் இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாடு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:


சட்டத்திற்கு இணங்கி வாழும் மக்களுக்கு தெருவில் தர்மம் கேட்பவர்கள் தொந்தரவாக இருக்கிறார்கள். மேலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் கேட்பவர்களும், வியாபாரிகளும் வேறு பகுதியில் இருந்து இந்த மாகாணத்திற்கு வரவரவழைக்கப்படுகிறார்கள்.

இது ஒரு வியாபாரமாக நடைபெற்று வரும் நிலையில் மனித குலத்தையே இழிவுபடுத்தும் செயலாக உள்ளது. அத்துடன் குழந்தைகளை கட்டாயப்படுத்தி இதில் ஈடுபடுத்துகிறார்கள். மேலும் எங்களின் தெருக்களில் இது போன்ற நபர்களின் செயல்பாடுகள் மக்களின் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்திற்கும் தொந்தரவாக இருப்பதுடன் சுற்றுச்சூழல் தொல்லைகளையும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் உண்டாக்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad