ஏ தள்ளு தள்ளு தள்ளு; ரயிலை தள்ளி சென்ற ஊழியர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

ஏ தள்ளு தள்ளு தள்ளு; ரயிலை தள்ளி சென்ற ஊழியர்கள்!

ஏ தள்ளு தள்ளு தள்ளு; ரயிலை தள்ளி சென்ற ஊழியர்கள்!

பழுதடைந்து நிற்கும் இரு சக்கர வாகனம், கார், பேருந்து, லாரி உள்ளிட்டவற்றை தள்ளி செல்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழுதடைந்த ரயிலை ஊழியர்கள், பொதுமக்கள் தள்ளி சென்ற நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயில்களை இயங்கும் மின்சார வயர்களை ரயில் வேகனில் சென்று சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹர்தா என்ற இடத்தில் அந்த ரயில் வேகனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த பொது மக்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு ரயில் பெட்டியை கைகளால் தள்ளி சென்றனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதேசமயம், இது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளங்களில் இருக்கும் கூர்மையான கற்களை மிதித்தவாறு அவர்கள் ரயில் வேகனை தள்ளி சென்றுள்ளனர்.

அதில் சிலர் செருப்பு கூட அணியாமல் இருந்தது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. வேறு ஏதாவது ஒரு இழுவண்டியை வர வழைத்து பழுதடைந்த ரயில் வேகனை இழுத்துச் செல்லாமல் பொதுமக்களையும், ஊழியர்களையும் பயன்படுத்தியதும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் அவ்வழியே செல்லும் சில ரயில்கள் தாமதமாக சென்றதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இரவு நேர ரயிலில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் வைஷ்னவ் ஆய்வு செய்தபோது, அமைச்சரிடம் இந்திய ரயில்வேத்துறையை பயணிகள் புகழ்ந்து பேசும் வீடியோ வெளியான அடுத்த சில நாட்களில் மேற்கண்ட இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad