பள்ளிகளில் ’ஸ்கூல் பப்பிள்’ முறை; மாநில அரசின் பலே ஏற்பாடு!
கர்நாடக மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின் சீற்றம் பெரிதும் தணிந்திருக்கிறது. இந்த சூழலில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க 13 பேர் கொண்ட ஆலோசனைக் கவுன்சிலை மாநில அரசு உருவாக்கியது. அவர்கள் அளித்த பரிந்துரையின் பேரில், கொரோனா பாசிடிவ் விகிதம் 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அடுத்தகட்டமாக 6
முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்கூள் பப்பிள் முறை பரிந்துரை
இதையொட்டி ஆலோசனைக் கவுன்சில் அளித்த பரிந்துரைகள் குறித்து ஆலோசனை நடத்தி கர்நாடக அரசு இன்று முடிவெடுக்கவுள்ளது. வரும் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பள்ளிகளில் ’
ஸ்கூல் பப்பிள்’ முறையை அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (TAC) முன்வைத்துள்ள கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குழுக்களாக பிரிப்பு
இந்த முறையின்
மூலம் 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் போது கொரோனா பரவாமல் பெரிதும் தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதென்ன ‘ஸ்கூல் பப்பிள்’ என்று பலரும் ஆர்வத்துடன் தேடத் தொடங்கியுள்ளனர். அதாவது, பள்ளிக்கு வரும் மாணவர்களை சிறுசிறு குழுக்களாக பிரித்து விட வேண்டும். இந்த ஒவ்வொரு குழுவும்
பப்பிள் என்று அழைக்கப்படும்.
No comments:
Post a Comment