கரும்பு கொள்முதல் விலை போதாது: ராமதாஸ் வலியுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

கரும்பு கொள்முதல் விலை போதாது: ராமதாஸ் வலியுறுத்தல்!

கரும்பு கொள்முதல் விலை போதாது: ராமதாஸ் வலியுறுத்தல்!

கரும்பு கொள்முதல் விலை போதாது, உயர்த்த வேண்டும் என பாமக நிறூவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2900 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,755 மட்டுமே வழங்கப்படும். இந்த கொள்முதல் விலை போதுமானதல்ல. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு 10% சர்க்கரைத் திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு நியாய மற்றும் ஆதாய விலையாக ரூ.2,850 வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.50 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. 9.50% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான நியாய மற்றும் ஆதாய விலை ரூ.2707.50-இல் இருந்து ரூ.2755 ஆக, அதாவது டன்னுக்கு ரூ.47.50 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கரும்பின் சர்க்கரைத் திறன் 9.5%க்கும் குறைவாகவே இருக்கும் என்பதால் டன்னுக்கு ரூ.2755 கிடைக்கும். இந்த விலை போதுமானதல்ல... உழவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.


மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை, கரும்புக்கான கொள்முதல் விலையை தீர்மானம் செய்வதில் மாநில அரசுகள் கடைபிடிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றால் தமிழ்நாட்டு விவசாயிகள் தான் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு அறிவிக்கும் விலைக்கு மேல் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2016-17 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அப்போது மத்திய அரசின் விலை, மாநில அரசின் ஊக்கத்தொகை ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு டன்னுக்கு ரூ.2,750 கொள்முதல் விலை வழங்கப்பட்டு வந்தது.

அதன்பின் வருவாய்ப்பகிர்வு முறைப்படி கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடைமுறைகள் இன்னும் முடிவடையாத நிலையில், உழவர்களுக்கு இடைக்கால ஏற்பாடாக டன்னுக்கு ரூ.2750 மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் விலையை சர்க்கரை ஆலைகளும், மீதமுள்ள தொகையை தமிழக அரசு ஊக்கத்தொகையாகவும் வழங்குகின்றன.மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கொள்முதல் விலைப்படி தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.5 மட்டுமே கூடுதலாக கிடைக்கும். தமிழக அரசின் சார்பில் புதிதாக அறிவிக்கப்பட்டு, உழவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவுள்ள கூடுதல் ஊக்கத்தொகை ரூ.150-ஐயும் சேர்த்தால் ரூ.155 மட்டுமே கூடுதலாக கிடைக்கும். இது எந்த வகையிலும் ஏற்க முடியாத குறைந்த விலையாகும். தமிழகம் தவிர்த்த பிற மாநில உழவர்களுக்கும் இந்த கொள்முதல் விலை ஏமாற்றத்தையே அளிக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad