பொறியியல் கலந்தாய்வு: ரேண்டம் எண்கள் வெளியீடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

பொறியியல் கலந்தாய்வு: ரேண்டம் எண்கள் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: ரேண்டம் எண்கள் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நடப்பு கல்வியாண்டில் பெரும்பாலான மாணவர்கள் ஒரே கட் - ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஒரே கட் - ஆப் மதிப்பெண் உள்ளவர்களுக்கு, ரேண்டம் எண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே ரேண்டம் எண் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு விண்ணப்பித்த 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 பேருக்கும் ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் ரேண்டம் எண்கள ை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகிறது. பின்னர், செப்டம்பர் 7ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
பெரும்பாலான மாணவர்களுக்கு ஒரே கட்- ஆப் மதிப்பெண்கள் இருப்பதால், நடப்பு ஆண்டின் மாணவர் சேர்க்கையில் ரேண்டம் எண்கள் முக்கிய பங்காற்ற உள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad