ஆப்கன் அடுத்த அதிபர் நான் தான் - துணை அதிபர் அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

ஆப்கன் அடுத்த அதிபர் நான் தான் - துணை அதிபர் அதிரடி!

ஆப்கன் அடுத்த அதிபர் நான் தான் - துணை அதிபர் அதிரடி!

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில் சட்டப்படி நானே அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதில் இருந்து தலிபான்களின் ஆட்டம் ஆரம்பமானது. 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்கள், நேற்று முன்தினம் தலைநகர் காபூல் நகரை முழுவதுமாக சுற்றி வளைத்தனர். இதை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின்படி தானே நாட்டின்

காபந்து அதிபர் என துணை அதிபர் அம்ருலா சாலே தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின்படி அதிபர் ராஜினாமா செய்தாலோ, தப்பியோடினாலோ, உயிரிழந்தாலோ துணை அதிபரே காபந்து அதிபராகி விடுவார்.

தற்போது நான் நாட்டில் தான் உள்ளேன். எனவே, சட்டப்படி நான் தான் காபந்து அதிபர். அனைத்துத் தலைவர்களிடமும் நான் ஆதரவைக் கோரவுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad