எந்த நாட்டிற்கும் தொந்தரவு தர மாட்டோம்... பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் - தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், தலிபான் அமைப்பின்
செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இங்கு இருக்கிறோம்.
தங்கள் ஆட்சியில் பெண்களின் உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள்
வழங்கப்படும். சர்வதேச சமூகம் சொல்வது போல் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் ஈடுபட மாட்டோம்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களை மேம்படுத்த உதவுவோம். சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆப்கன் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். ஆப்கானிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்துவோம்.
ஆப்கானிஸ்தானில் தனியார் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படலாம்.
பத்திரிகை, ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட வேண்டியது அவசியம். ஊடங்கங்கள் எங்களை தாராளமாக விமர்சிக்கலாம், அப்போது தான் நாங்கள் மேம்பட முடியும். ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
ஆப்கானிஸ்தானில் வாழும் வெளிநாட்டவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஆப்கன் தலைநகர் காபூலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் காத்திருப்போர் வீடு திரும்பலாம்; அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தும் நேராது.
இஸ்லாமிய சட்ட விதிகளை மாற்றாக எதையும் செய்ய மாட்டோம்.
ஒரு சகோதரனைப் போல் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதில் சொல்வோம். 20 ஆண்டுகளாக அமெரிக்காவுடன் இணைந்து எங்களை எதிர்த்தவர்களை விரட்ட மாட்டோம்.
அனைவரும் ஆப்கானிஸ்தானின் சொத்துக்கள்; அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்வோம். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தவர்களை வீழ்த்தி உள்ளோம். 20 ஆண்டுகால போரில் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment