சமையல் சிலிண்டர் விலை உயர்வு: ராமதாஸ் கடும் கண்டனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

சமையல் சிலிண்டர் விலை உயர்வு: ராமதாஸ் கடும் கண்டனம்!

சமையல் சிலிண்டர் விலை உயர்வு: ராமதாஸ் கடும் கண்டனம்!

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் உள்ளிட்ட எரிவாயுக்களின் விலை மலை போல் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை ரூ.850லிருந்து உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து ரூ.165, அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ராமதாஸ், “சமையல் எரிவாயு விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்; தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad