பிறந்தநாள் கொண்டாட ஆசை இல்லை: கண்ணீருடன் சசிகலா சொன்ன காரணம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

பிறந்தநாள் கொண்டாட ஆசை இல்லை: கண்ணீருடன் சசிகலா சொன்ன காரணம்!

பிறந்தநாள் கொண்டாட ஆசை இல்லை: கண்ணீருடன் சசிகலா சொன்ன காரணம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலையாகியுள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் வழியில் அரசியலில் ஈடுபடப் போவது உறுதி சென்று தெரிவித்த அவர், அடுத்த சில நாட்களிலேயே அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

ஆனாலும், தொண்டர்கள் மத்தியில் சசிகலா தொலைபேசி மூலம் தொடர்ந்து பேசி வருகிறார். அதில், அதிமுகவை கைபற்றுவேன் என்ற கோணத்திலேயே அவர் பேசி வருகிறது. தொலைகாட்சிகளில் அவர் அளித்த பேட்டிகளில், ஜெயலலிதாவுக்கும் தனக்குமான நெருக்கம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில், சசிகலாவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 18ஆம் தேதி (நாளை) வருகிறது. சிறையில் இருந்து அவர் வெளியேறியதும் வரும் பிறந்தநாள் என்பதால், அதனை உற்சாகமாக கொண்டாட தொண்டர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அன்றைய தினம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தி அரசியல் பயணத்தை அவர் தொடங்குவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், தொண்டர்கள் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று சசிகலா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆதரவாளர் ஒருவரிடம் சசிகலா பேசியபோது, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி அந்த ஆதரவாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த சசிகலா, “கொரோனா காலம் என்பதால், உங்களது பகுதிகளிலேயே ஏதாவது பூஜை செய்யுங்கள், ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி உதவுங்கள். எனக்காக மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும் கடவுளை வேண்டுங்கள். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

என் பிறந்தநாளை அம்மாவுடன்தான் கொண்டாடியுள்ளேன். அவர் சென்ற பின்னர், இப்போதெல்லாம் பிறந்தநாள் கொண்டாடவே ஆசை வருவதில்லை என்று தழுதழுத்த குரலில் பேசிய சசிகலா, எனது பிறந்தநாளை கொண்டாட விரும்பும் தொண்டர்கள், ஏழை மக்களுக்கு உதவிகள் புரிந்து கொண்டாடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள சூழலில் ஊரடங்கை மதிக்கவேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் வாழ்க்கை நல்ல நிலைக்கு வரவேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். கொரோனா பாதிப்பு குறைந்ததும் தொண்டர்களை சந்திக்க வருவேன். தொண்டர்களைத்தான் அம்மா எனக்கு விட்டுச் சென்றுள்ளார் என்றும் அந்த உரையாடலின்போது சசிகலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad