மிஸ்டர் கூல் சிஎம் ஸ்டாலின்: இதெல்லாம் வேண்டாம் ப்ளீஸ்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அதிரடியான அறிவிப்புகளை ஒரு பக்கம் வெளியிட்டு கவனம் பெற்று வந்தாலும் பக்குவமான அணுகுமுறையாலும் சிக்ஸர் அடிக்கிறார்.
முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார் ஸ்டாலின். ஆனால் வெற்றிக் களிப்போ, ஆர்ப்பாட்டமோ அவர் முகத்தில் இல்லை. பொறுமையாகவும்,
பெருந்தன்மையுடனும் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.
திமுக - அதிமுக என்றால் எலியும் பூனையுமாகவே சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் இருப்பார்கள் என்ற வழக்கம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள திமுக எதிர்கட்சியினரின் கருத்துகளை உன்னிப்பாக கேட்கிறது. அதற்கு முறையான பதில்களை வழங்குகிறது. எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் பேசும் போது அமைச்சர்கள் குறுக்கிட வேண்டாம் என்று சொன்னது, தடித்த சொற்களை யாரும் பேச வேண்டாம் என சொல்லியதுடன் அமைச்சர் பேசிய வார்த்தைகளையே
அவைக்குறிப்பிலிருந்து நீக்கச் சொன்னது என ஸ்டாலினின் நிதானமும் பக்குவமும் எதிர்கட்சியினரையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஸ்டாலின் நேற்று தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும் முக்கிய உத்தரவை பிறப்பித்தார். புகழுரைகள் குறித்த அந்த உத்தரவும் கவனம் பெற்றுள்ளது.
நேற்று சட்டத்துறை அமைச்சர், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்யும் முன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.
அப்போது
ஸ்டாலின் குறுக்கிட்டு பேசினார், “அமைச்சர் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய நேரடியாக வர வேண்டும். பதிலளித்து பேசும் போது, சில வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். திமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள். பதிலுரையின் போது, உங்களை ஆளாக்கிய, உருவாக்கிய முன்னோடிகளுக்கு வணக்கம் செலுத்தி பேசுவது முறை.
No comments:
Post a Comment