உள்ளாட்சித் தேர்தல்: இரண்டு நாள் தான் டைம், முந்துங்க மக்களே!
தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
அதன் அடுத்த கட்டமாக வரும்
31ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. “புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மேற்படி மாவட்டங்களிலுள்ள சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு வாக்காளரின் பெயரும் ஊரக உள்ளாட்சி
அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்கப்பட்டு, அவர்களை தொடர்புடைய உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வைத்து ஜனநாயக கடமையாற்ற வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது.
மேற்படி 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் தனியாக தயாரிக்கப்படுவது அல்ல. இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து 19 மார்ச் 2021 அன்று வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலிலுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கிராம ஊராட்சி வார்டு வாரியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றது. அதன் பிறகு கிராம ஊராட்ச
ி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலரால் 31 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment