தமிழக அரசு கஜானா காலி; முதல்வருக்கு செக் வைத்த ஓபிஎஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

தமிழக அரசு கஜானா காலி; முதல்வருக்கு செக் வைத்த ஓபிஎஸ்!

தமிழக அரசு கஜானா காலி; முதல்வருக்கு செக் வைத்த ஓபிஎஸ்!

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் அவையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, தமிழக அரசின் கஜானா நிலை தொடர்பாக கடந்த அதிமுக அரசு பற்றி பேசினார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, கஜானா குறித்து உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசிய கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கஜானா காலி

அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர் செல்வப்பெருந்தகை கஜானா குறித்து சொன்ன கருத்தை ‘காலியானது’ என்று மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், முதல்வர் இந்த மன்றத்தில் நிதிநிலை அறிக்கையை அளித்துள்ளார்.

உறுப்பினர்கள் அச்சம்

மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்கள், மத்திய அரசின் பங்கின் அளவு, வருவாய் பற்றக்குறை, பற்றாக்குறை மூலமாக நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என்று சொல்லியிருக்கிறார். இதில் கஜானா காலி என்றால் எப்படி? முதல்வரே இப்படி சொல்லிவிட்டார் என்று உறுப்பினர்கள் அச்ச உணர்வோடு இருப்பார்கள்.

ஓபிஎஸ் எழுப்பிய கேள்வி

இது அவை குறிப்பில் இருக்கலாமா என்பதை சட்டப்பேரவை தலைவரின் முடிவிற்கே விட்டுவிடுவதாக தெரிவித்தார். பின்னர் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கஜானா குறித்து ஏற்கனவே நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்தியுள்ளோம். நிதிநிலை உள்ளபடியே காலியாக இருக்கும்பட்சத்தில், நிதிநிலை இருக்கு என்று சொல்ல முடியுமா?

அதனால் தான் உண்மையை சொல்லியிருப்பதாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்ச ி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஒரு மாநிலத்தின் முதல்வர் சட்டமன்றத்தில் சொல்வது சட்டம். அரசாங்கம், அதுதான் மரபு, விதி. ஆகவே முதல்வரே இதனை சொல்லலாமா என்பது தான் என்னுடைய கேள்வி என்று குறிப்பிட்டார். இத்தகைய காரசார விவாதத்தால் அவை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad