நியாய விலைக் கடைகளில் விற்பனை; அமைச்சர் சொன்ன மகிழ்ச்சியான தகவல்!
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தின் போது பேசிய மணப்பாறை உறுப்பினர், நியாய விலைக் கடைகளில்
தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து எங்களை தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறார்.
முதல்வர் முக்கிய உத்தரவு
அதன்படி, ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அந்த மாவட்டத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளையும், அரசு அலுவலர்களையும் வைத்து அரிசியின் தரத்தை ஆய்வு செய்து, மக்களுக்கு நல்ல முறையில் அரிசி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடைக்கு நேரடியாகச் சென்று தரமான அரிசி வழங்கப்படுகிறதா என்றும், எடை சரியாக வழங்கப்படுகிறதா என்றும் முதல்வரே ஆய்வு செய்தார்.
தரமான அரிசி வழங்க உறுதி
இத்தகைய நடவடிக்கைகள்
மூலம் நியாய விலைக் கடைகளில் தரமான அரிசியே வழங்கப்படுகிறது என்றார். மேலும் நெல் கொள்முதல் விஷயத்தில் ஈரப்பதம் என்பது 17 சதவீதம் என்ற அளவில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சியில் ஈரப்பதம் அதிகமாக சுமார் 20 சதவீதம், 21 சதவீதம் என்ற வகையில் நெல்லை கொள்முதல் செய்துவிட்டார்கள். அந்த நெல்லை எல்லாம் அறுப்பதற்கு துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் வரை அவகாசம்
குறிப்பாக தனியார் அரிசி ஆலை முகவர்களை எல்லாம் அழைத்து, நான்கு அல்லது ஐந்து முறை கூட்டம் நடத்துகிறோம். கடந்த காலங்களில் அரிசி கறுப்பு நிறமாகவும், பளுப்பு நிறமாகவும் சில நியாய விலைக் கடைகளில் இருந்தது. அவற்றை மாற்ற Colour Sorter பொருத்த வேண்டும் என்று தனியார் அரிசி ஆலை முகவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறோம். அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் வரை எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார்கள்.
No comments:
Post a Comment